Monday, 19 December 2016

கண்ணிற்க்கான பயிற்சிகள்

கண்ணிற்க்கான பயிற்சிகள்:

                                                                     வாழ்க்கை முழுக்க கண்களுக்கு கண்ணாடியை போடாமல் நம் கண்களை அனைத்து கண் நோயிகளிடம் இருந்து காக்க சில முக்கியமான கண் பயிற்சிகளை பார்ப்போம்.


ஆயில்புல்லிங்:
                                      ஆயில்புல்லிங் செய்ய 3 வித எண்ணெய்களை பயன்படுத்தலாம்.

                                      பெயர்                                                                             நன்மைகள் 

                                          
                                       தேங்காய் எண்ணெய்                                                     50%
                                       நல்லெண்ணெய்                                                               80%
                                       வேப்பெண்ணெய்                                                            100%

பயிற்சி செய்யும் முறை:
                                                          

  1. காலை எழுந்த பல் துலக்கும் உங்களுக்கு ஏற்ப குறிப்பிட்ட அளவு எண்ணையை வாயில் ஊற்றி 5 நிமிடங்களில் இருந்து 8 நிமிடங்கள் வரை வாயை நன்கு கொப்பளித்து துப்பவும்.பின்பு வாயை 10 நிமிடம் கழித்து ப்ரெஷ் செய்யவும்.

 2.இதே போன்று இரவில் பல் துலக்கிய பின் வாயில் எண்ணையை ஊற்றி கொப்பளித்து துப்பிவிட்டு உறங்க செல்லவும்.

பயன்கள்:
                                                    கண் நரம்புகள் தூண்டப்படும் மற்றும் கண்களுக்கு தேவையான குளிர்ச்சி கிடைக்கும்,வாயிற்புண்கள் ,பற்சிதைவுகள் சரியாகும்.முகத்தில் இருக்கும் சுருக்கங்களும் ஒடுக்கங்களும் மறையும். 


சுழற் பயிற்சி
                                                   
ஆயில்புல்லிங் செய்த பிறகு சூரியன் உதிக்கும் தருணத்தில் கிழக்கு பக்கமாக அமர்ந்து கண்களை கடிகார முள் சுற்றும் திசையில் பொறுமையாக அந்த திசையில் உள்ள அனைத்து பொருட்களையும்  பார்த்துக்கொண்டே 50 தடவை சுத்தவும்.இதே போன்று கடிகார முள் சுழலும் திசைக்கு எதிர் திசையிலும் 50 தடவை சுத்தவும்.

மேல்-கீழ் பயிற்சி
                                                      


                    

             
 மேலே உள்ள வானத்தையும் கீழே உள்ள நிலத்தையோ அல்லது உங்களின் கையையோ பார்க்கவும்.இவ்வாறு மேலும் கீழுமாக 50 தடவை பார்க்கவும்.


இடது-வலது  பயிற்சி:
                                                       










உங்களுக்கு இடது புறத்தில் உள்ள பொருளை பார்க்கவும் பின்பு வலது புறத்தில் உள்ள பொருளையும் பார்க்கவும் இவ்வாறாக
50 தடவை இடது வழதாக பார்க்கவும்.                                                      



குவிய பயிற்சி:                    
                                                       

  இப்போது இடது வலது பயிற்சியை முடித்துவிட்டு சூரிய ஒளி கண்களை கூசாத திசையில் அமர்ந்து ஒரு பேனாவை எடுத்து அந்த பேனாவின் ஒரு முனையை உற்று பார்க்கவும்(கவனம் பேனாவின் ஒரு முனையில் இருக்கவேண்டும்)இப்போது அந்த பேனாவை 2 இன்ச் வரை நெற்றி பொட்டு அருகில் கொண்டு வரவும் பின்பு 10 இன்ச் தூரம் வரை கொண்டுசெல்லவும்.இவ்வாறாகமுன்னும் பின்னுமாக பேனாவை நகர்த்தி 50 தடவை செய்யவும்.








வெயிலில் நடை பயிற்சி:
                                                             
                                                               
இப்பயிச்சியை செய்து முடித்த உடனே எழுந்திருக்க வேண்டாம். ஒரு 10 நிமிடம் கண்களை முடி அமைதியாக இருந்து பின்பு எழுந்து ஒரு 100 மீட்டராவது வெயிலில் நடக்கவும்.
                                                                
 எண்ணெய் குளியல்:
                                                             
 வாரத்திற்கு சனிக்கிழமை சனிக்கிழமை நல்ல எண்ணெய் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து சீயக்காய் தேய்த்து குளிக்கவும். 

   எண்ணெய் குளியலின் பயன்கள்:                                                       
                                                                       
                                                                 கண்கள் மற்றும் உடல் உள் மற்றும் வெளி உறுப்புகள் குளிர்ச்சி பெரும்.தோல் தொற்றுகள் நெருங்காது.உடல் அனைத்தும் புத்துணர்ச்சியை பெரும்.





என்னுடைய முன்பதிவான 
கண்நோய்கள் சரியாக மருந்தினை காண இங்கே கிளிக் செய்யவும்.


கண்நோய்கள் தூரப்பார்வை மற்றும் கிட்டப்பார்வை சரியாகி கண்ணாடியில் இருந்து 3 லில் இருந்து 6 மாதங்களுக்குள் விடுதலை


வணக்கம் தோழர்களே........

                                                 நாம் முன்னோர்களிடம் மொபைல் போன் கிடையாது.வெயிலில் அதிகமாக உழைத்தனர் சத்துமிக்க உணவுகளையும் உணவுமுறைகளையும் பின்பற்றினர் கண்களுக்கு தேவையான சில பயிற்சிகளையும் மேற்கொண்டனர்.ஆனால்  இன்றைய நவீன வழிகளிலும் வேகமான வாழ்க்கையிலும் சத்தற்ற உணவுகளையும் உணவு முறைகளையும் பின்பற்றி நமது ஆரோக்கியத்திற்கு பிரச்சனைகள் வரவேற்கின்றோம் . அப்படி ஏற்படுகின்ற பிரச்சனைகளுள் ஒன்றுதான் கிட்டபார்வை மற்றும் தூரப்பார்வை மற்றும் இதர கண் நோய்களாகும்.




       இவ்வாறாக  கண்ணில் ஏதாவது ஒரு நோய்  வந்தால் ஆங்கில  கண் மருத்துவரை அணுகுவோம் அவர் உங்கள் கண்களை பரிசோதித்து உங்களுக்கு கண் பார்வையில் குறைபாடு உள்ளது என்று சொட்டு மருந்து தருவார் அல்லது கண் கண்ணாடியை ஆறு மாதங்களுக்கோ ஒரு வாருடங்களுக்கோ அணிய சொல்லுவார்  நாமும் ஆறு மாதமோ ஒரு வருடமோ தானே என்று அணிவோம் ஆனால் அதையே நம் கண்கள் பழகிக்கொள்கிறது இதனால் நாம் காலம் முழுவதும் அணித்துக்கொள்வோம்.சில நபர்களுக்கு கண்ணாடி அணிந்தும்  கண்ணின் பவர் குறைத்துக் கொண்டே வரும்.இப்படி ஆங்கில மருத்துவத்தை நாடி சென்றால் குறைந்தது 2000 ஆயிரத்தில் இருந்து இரண்டு லட்சம் வரை பண செலவும் . இது நமக்குத்தேவையா?




நமது முன்னோர்கள் ஆயுர்வேதத்தில் அனைத்து கண்பார்வைகளில் இருந்தும் குணமாக நமக்கு குறைத்த பண செலவில் சரியாக ஒரு வழியை எழுதி வைத்து சென்றுள்ளார்.அவற்றை இப்போது முழுமையாக இங்கே பார்ப்போம்.

இந்த மருந்தை நான் வேறு ஒரு வலையில் இருந்துதான் படித்து தெரிந்து கொண்டேன்.ஆனால் அந்த வலையில் எனக்கு தேவையான அனைத்து தகவல்களும் கிடைக்காமலும் சரியான விளக்கமும் கண்ணுக்குத்தேவையான பயிற்சிகளை தரவில்லை.கண்ணிற்கு தேவையான பயிற்சிகளை என் தாத்தா விடம் கேட்டு பெற்றுக்கொண்டேன்.நானும் தூரப்பார்வையால் பாதிக்க பட்டேன்.நான் இந்த மருந்தினையும் பயிற்சியினையும் முறையாக 100 நாட்களில் (உடலின் நிலையை பொருத்து நாட்களின் கண்ணகிக்கு மாறும் ) நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இப்போது கண்ணில் எனக்கு எவ்வித பிரசணைகளும் உடல் ஆரோக்கியத்துடனும் உள்ளேன்.என்னை போன்று நீங்களும் கஷ்டபட்டு வழிகளை தேடக்கூடாது என்பதற்க்காக  இங்கு உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையில் அளித்துள்ளேன்.



  • மருந்தின் பெயர்: நேத்ர்ரோகாதிகாரம்  (இந்த மருந்தை ரெடிமேடாக தயாரித்து விற்க முடியாது எனவே இந்த மருந்து நாம் வீட்டில் தான் தயாரித்துக்கொள்ள வேண்டும்)

  • கண்ணிற்க்கான பயிற்சிகள்:சுழற் பயிற்சி,மேல்-கீழ் பயிற்சி,இடது-வலது  பயிற்சி,குவிய பயிற்சி,ஆயில் புல்லிங்,வெயிலில் நடை பயிற்சி.



மருந்து தயாரிக்க தேவையான பொருட்கள்:

1.திரவ மருந்து பொருட்கள்
2.திட மருந்து பொருட்கள்

திரவ மருந்து பொருட்கள்
 

              பெயர்                                                                                                                        அளவு(கிராமில்)

 1.திரிபலா கஷாயம்                                                                                                                       800
     (த்ரிபலா கஷாய)

2.கரிசாலைச்சாறு                                                                                                                           800
   (ப்ருங்கராஜ ரஸ)

3.ஆடாதோடைச்சாறு                                                                                                                     800
   (வாஸா ரஸ)

4.தண்ணீர்விட்டான் கிழங்குச்சாறு                                                                                           800
   (ஸதாவரீ ரஸ)

5.சீத்தில்கொடி  சாறு                                                                                                                       800
   (குடூசீரஸ)

6.நெல்லிக்காய் சாறு                                                                                                                       800
   (ஆமலகீ ரஸ)

7.தூய்மையான பசுவின் நெய்                                                                                                    800
    (க்ருத)   

குறிப்பு:இந்த ஏழு பொருட்களையும் சாறாக(நீர்மமாக) வாங்கி கொள்ளவும்.சாறாக கிடைக்கவில்லை என்றால் பொடியாக வாங்கி தனி தனியாக சுண்டக்காய்ச்சி  சாறாக எடுத்துக்கொள்ளவும்.




                                                                                                      

திட மருந்து பொருட்கள்:

பெயர்                                                                                                                               அளவு(கிராமில்)

1.திப்பிலி பொடி                                                                                                                             50
        (பிப்பலீ)                                                            
2.உலர் நாட்டு திராட்சை                                                                                                            50
   (த்ராக்ஷ)

3.கடுக்காய் பொடி                                                                                                                       50
   (ஹரீதகீ பலத்வக்)
4.தான்றிக்காய் பொடி                                                                                                                50
    (பிபீதகீ பலத்வக்) 
5.நெல்லிமுள்ளி பொடி                                                                                                                50
    (ஆமலகி பலத்வக்)    
6.நீல ஆம்பல் கிழங்கு பொடி                                                                                                   50
   (நீலோத்பல கந்த)
7.அதிமதுரம் பொடி                                                                                                                     50
    (யஷ்டீ)
8.க்ஷிரகாகோலீ பொடி                                                                                                               50
9.சித்தில்கொடி  பொடி                                                                                                              50
    (குடூசீ)
10.கண்டங்கத்திரி  பொடி                                                                                                        50
      (கண்ட காரீ) 
11.சர்க்கரை                                                                                                                     தேவையான அளவு

குறிப்பு:
                  சர்க்கரை மற்றும் திராசையை தவிர மற்ற அனைத்து பொடிகளையும் ஒன்றாக கலந்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

செய்முறை:
                             100 கிராம் ஆட்டின் பாலுடன் (கிராம புறங்களில் கிடைக்கும் 100 மில்லி 20 ரூபாயில் இருந்து 40 ரூபாய்க்குள் இருக்கும்)  சர்க்கரை மற்றும் 3 உலர்  திராக்ஷை சேர்த்து காய்ச்சி வைத்துக்கொள்ளவும். திரவ பொருட்களையும் திடப் பொருட்களையும் 10:1 விகிதத்தில் சூடான ஆடு பாலுடன் சேர்த்து சாப்பிடவும்.




சாப்பிடும் நேரங்கள்:
                                                     காலை மாலை 2 வேலை உணவு உண்ட பின்  சாப்பிடவும்.ஆட்டு பால் கிடைக்காதவர்கள் தூய்மையான பசும்  பாலை பயன் படுத்தலாம்.ஆனால்  மருந்தின் பலன் விரைவாகவும் சீக்கிரமாகவும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்க.


இம்மருந்தினை உண்ணும் நாட்களில் பத்தியத்தினை கடைபிடிக்கவும்.
(பத்தியம் என்பது உணவில் அசைவ உணவுகள், கத்திரிக்காய், கருவாடு, மாங்காய்,போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள கூடாது.உணவுகளில் உப்பு,புளி கண்டியப்பாக சேர்க்கவே கூடாது.சாப்பிட கூடிய உணவுகள் வடி கஞ்சி,வெங்காயம்,நீராரம்,கம்கூழ்,பால்,தயிர்,பருப்பு,தோசை,இட்டி,புட்டு) சர்க்கரை வியாதிகள் உள்ளவர்கள் குழந்தைகள் கர்ப்பிணிகள்  இம்மருந்தினை பயன்படுத்த வேண்டாம்.




கிடைக்கும் இடம்:
                                                                               திருச்சி பெரியக்கட்டை வீதியின் இடது புறமாக  நாட்டுமருந்துக்கடைகள் ஏராளமாக உள்ளன.அங்கு ஏதேனும் ஒரு கடைகளில் வாங்கி கொள்ளலாம்.ஆனால்  நான் வாங்கிய கடையின் முகவரியை தருகிறேன்.


SRI VENGATESWARA AGENCES       ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஏஜென்சிஸ்
112, BIG BAZAAR STREET                                   112, பெரியக்கடை வீதி
TRICHY 620008                                                        திருச்சி 620008


விலை: 
                    வாங்கும் கடைகளை பொருத்து விலை ரூ 1500 ல் இருந்து 2500குள் அமையும்.நான் கொடுத்த முகவரி கடையில் 1500 ரூபாய்க்கு வாங்கினேன்.


மருந்துகளை வாங்கி நான் கூறிய படி தயாரித்து நான் கூறிய படி சாப்பிட்டு பயன் பெற்று இருளில் இருந்தும் கண் கண்ணாடிகளில் இருந்தும் உங்களை காத்துக்கொள்ளுவீர்களாக.

இதர நன்மைகள்:
                                               ஆண்மை பெருகும்,உடல் பலம் பெரும் எதிர் காலத்தில் கண்நோய்கள் வரவே வராது.உடல் நோய் எதிர்ப்புத்திறன் அதிகமாகும்.உடல் கட்டுக்கோட்பாகும்.

குறிப்பு:கண்களுக்கு தேவையான பயிற்சிகளை நீங்கள் கடைபிடிக்க வேண்டும்.

கண் பயிற்சிக்கு இங்கே கிளிக் செய்யவும்.


தொடர்புக்கு:9095004606