வணக்கம் தோழர்களே........
நாம் முன்னோர்களிடம் மொபைல் போன் கிடையாது.வெயிலில் அதிகமாக உழைத்தனர் சத்துமிக்க உணவுகளையும் உணவுமுறைகளையும் பின்பற்றினர் கண்களுக்கு தேவையான சில பயிற்சிகளையும் மேற்கொண்டனர்.ஆனால் இன்றைய நவீன வழிகளிலும் வேகமான வாழ்க்கையிலும் சத்தற்ற உணவுகளையும் உணவு முறைகளையும் பின்பற்றி நமது ஆரோக்கியத்திற்கு பிரச்சனைகள் வரவேற்கின்றோம் . அப்படி ஏற்படுகின்ற பிரச்சனைகளுள் ஒன்றுதான் கிட்டபார்வை மற்றும் தூரப்பார்வை மற்றும் இதர கண் நோய்களாகும்.
இவ்வாறாக கண்ணில் ஏதாவது ஒரு நோய் வந்தால் ஆங்கில கண் மருத்துவரை அணுகுவோம் அவர் உங்கள் கண்களை பரிசோதித்து உங்களுக்கு கண் பார்வையில் குறைபாடு உள்ளது என்று சொட்டு மருந்து தருவார் அல்லது கண் கண்ணாடியை ஆறு மாதங்களுக்கோ ஒரு வாருடங்களுக்கோ அணிய சொல்லுவார் நாமும் ஆறு மாதமோ ஒரு வருடமோ தானே என்று அணிவோம் ஆனால் அதையே நம் கண்கள் பழகிக்கொள்கிறது இதனால் நாம் காலம் முழுவதும் அணித்துக்கொள்வோம்.சில நபர்களுக்கு கண்ணாடி அணிந்தும் கண்ணின் பவர் குறைத்துக் கொண்டே வரும்.இப்படி ஆங்கில மருத்துவத்தை நாடி சென்றால் குறைந்தது 2000 ஆயிரத்தில் இருந்து இரண்டு லட்சம் வரை பண செலவும் . இது நமக்குத்தேவையா?
நமது முன்னோர்கள் ஆயுர்வேதத்தில் அனைத்து கண்பார்வைகளில் இருந்தும் குணமாக நமக்கு குறைத்த பண செலவில் சரியாக ஒரு வழியை எழுதி வைத்து சென்றுள்ளார்.அவற்றை இப்போது முழுமையாக இங்கே பார்ப்போம்.
இந்த மருந்தை நான் வேறு ஒரு வலையில் இருந்துதான் படித்து தெரிந்து கொண்டேன்.ஆனால் அந்த வலையில் எனக்கு தேவையான அனைத்து தகவல்களும் கிடைக்காமலும் சரியான விளக்கமும் கண்ணுக்குத்தேவையான பயிற்சிகளை தரவில்லை.கண்ணிற்கு தேவையான பயிற்சிகளை என் தாத்தா விடம் கேட்டு பெற்றுக்கொண்டேன்.நானும் தூரப்பார்வையால் பாதிக்க பட்டேன்.நான் இந்த மருந்தினையும் பயிற்சியினையும் முறையாக 100 நாட்களில் (உடலின் நிலையை பொருத்து நாட்களின் கண்ணகிக்கு மாறும் ) நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இப்போது கண்ணில் எனக்கு எவ்வித பிரசணைகளும் உடல் ஆரோக்கியத்துடனும் உள்ளேன்.என்னை போன்று நீங்களும் கஷ்டபட்டு வழிகளை தேடக்கூடாது என்பதற்க்காக இங்கு உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையில் அளித்துள்ளேன்.
- மருந்தின் பெயர்: நேத்ர்ரோகாதிகாரம் (இந்த மருந்தை ரெடிமேடாக தயாரித்து விற்க முடியாது எனவே இந்த மருந்து நாம் வீட்டில் தான் தயாரித்துக்கொள்ள வேண்டும்)
- கண்ணிற்க்கான பயிற்சிகள்:சுழற் பயிற்சி,மேல்-கீழ் பயிற்சி,இடது-வலது பயிற்சி,குவிய பயிற்சி,ஆயில் புல்லிங்,வெயிலில் நடை பயிற்சி.
மருந்து தயாரிக்க தேவையான பொருட்கள்:
1.திரவ மருந்து பொருட்கள்
2.திட மருந்து பொருட்கள்
திரவ மருந்து பொருட்கள்
பெயர் அளவு(கிராமில்)
1.திரிபலா கஷாயம் 800
(த்ரிபலா கஷாய)
2.கரிசாலைச்சாறு 800
(ப்ருங்கராஜ ரஸ)
3.ஆடாதோடைச்சாறு 800
(வாஸா ரஸ)
4.தண்ணீர்விட்டான் கிழங்குச்சாறு 800
(ஸதாவரீ ரஸ)
5.சீத்தில்கொடி சாறு 800
(குடூசீரஸ)
6.நெல்லிக்காய் சாறு 800
(ஆமலகீ ரஸ)
7.தூய்மையான பசுவின் நெய் 800
(க்ருத)
குறிப்பு:இந்த ஏழு பொருட்களையும் சாறாக(நீர்மமாக) வாங்கி கொள்ளவும்.சாறாக கிடைக்கவில்லை என்றால் பொடியாக வாங்கி தனி தனியாக சுண்டக்காய்ச்சி சாறாக எடுத்துக்கொள்ளவும்.
திட மருந்து பொருட்கள்:
பெயர் அளவு(கிராமில்)
1.திப்பிலி பொடி 50
(பிப்பலீ)
2.உலர் நாட்டு திராட்சை 50
(த்ராக்ஷ)
3.கடுக்காய் பொடி 50
(ஹரீதகீ பலத்வக்)
4.தான்றிக்காய் பொடி 50
(பிபீதகீ பலத்வக்)
5.நெல்லிமுள்ளி பொடி 50
(ஆமலகி பலத்வக்)
6.நீல ஆம்பல் கிழங்கு பொடி 50
(நீலோத்பல கந்த)
7.அதிமதுரம் பொடி 50
(யஷ்டீ)
8.க்ஷிரகாகோலீ பொடி 50
9.சித்தில்கொடி பொடி 50
(குடூசீ)
10.கண்டங்கத்திரி பொடி 50
(கண்ட காரீ)
11.சர்க்கரை தேவையான அளவு
குறிப்பு:
சர்க்கரை மற்றும் திராசையை தவிர மற்ற அனைத்து பொடிகளையும் ஒன்றாக கலந்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
செய்முறை:
100 கிராம் ஆட்டின் பாலுடன் (கிராம புறங்களில் கிடைக்கும் 100 மில்லி 20 ரூபாயில் இருந்து 40 ரூபாய்க்குள் இருக்கும்) சர்க்கரை மற்றும் 3 உலர் திராக்ஷை சேர்த்து காய்ச்சி வைத்துக்கொள்ளவும். திரவ பொருட்களையும் திடப் பொருட்களையும் 10:1 விகிதத்தில் சூடான ஆடு பாலுடன் சேர்த்து சாப்பிடவும்.
சாப்பிடும் நேரங்கள்:
காலை மாலை 2 வேலை உணவு உண்ட பின் சாப்பிடவும்.ஆட்டு பால் கிடைக்காதவர்கள் தூய்மையான பசும் பாலை பயன் படுத்தலாம்.ஆனால் மருந்தின் பலன் விரைவாகவும் சீக்கிரமாகவும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்க.
இம்மருந்தினை உண்ணும் நாட்களில் பத்தியத்தினை கடைபிடிக்கவும்.
(பத்தியம் என்பது உணவில் அசைவ உணவுகள், கத்திரிக்காய், கருவாடு, மாங்காய்,போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள கூடாது.உணவுகளில் உப்பு,புளி கண்டியப்பாக சேர்க்கவே கூடாது.சாப்பிட கூடிய உணவுகள் வடி கஞ்சி,வெங்காயம்,நீராரம்,கம்கூழ்,பால்,தயிர்,பருப்பு,தோசை,இட்டி,புட்டு) சர்க்கரை வியாதிகள் உள்ளவர்கள் குழந்தைகள் கர்ப்பிணிகள் இம்மருந்தினை பயன்படுத்த வேண்டாம்.
கிடைக்கும் இடம்:
திருச்சி பெரியக்கட்டை வீதியின் இடது புறமாக நாட்டுமருந்துக்கடைகள் ஏராளமாக உள்ளன.அங்கு ஏதேனும் ஒரு கடைகளில் வாங்கி கொள்ளலாம்.ஆனால் நான் வாங்கிய கடையின் முகவரியை தருகிறேன்.
SRI VENGATESWARA AGENCES ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஏஜென்சிஸ்
112, BIG BAZAAR STREET 112, பெரியக்கடை வீதி
TRICHY 620008 திருச்சி 620008
விலை:
வாங்கும் கடைகளை பொருத்து விலை ரூ 1500 ல் இருந்து 2500குள் அமையும்.நான் கொடுத்த முகவரி கடையில் 1500 ரூபாய்க்கு வாங்கினேன்.
மருந்துகளை வாங்கி நான் கூறிய படி தயாரித்து நான் கூறிய படி சாப்பிட்டு பயன் பெற்று இருளில் இருந்தும் கண் கண்ணாடிகளில் இருந்தும் உங்களை காத்துக்கொள்ளுவீர்களாக.
இதர நன்மைகள்:
ஆண்மை பெருகும்,உடல் பலம் பெரும் எதிர் காலத்தில் கண்நோய்கள் வரவே வராது.உடல் நோய் எதிர்ப்புத்திறன் அதிகமாகும்.உடல் கட்டுக்கோட்பாகும்.
குறிப்பு:கண்களுக்கு தேவையான பயிற்சிகளை நீங்கள் கடைபிடிக்க வேண்டும்.
கண் பயிற்சிக்கு இங்கே கிளிக் செய்யவும்.
தொடர்புக்கு:9095004606







No comments:
Post a Comment